13 ஆண்டுகளுக்கு பின் கோயில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு
13 ஆண்டுகளுக்கு பின் கோயில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்:
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் பணியாளர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு பின் பதவி உயர்வு வழங்கப்பட்டது.பணி மூப்பு அடிப்படையில் முருகன் - பேஷ்கார் பதவியிலிருந்து மக்கள் தொடர்பு அலுவலராகவும், உதவியாளர் பதவியிலிருந்த செந்தில்குமார் பேஷ்காராகவும், கார்த்திக்ராஜா இளநிலை உதவியாளராகவும் பதவி உயர்வு பெற்றனர். இளநிலை உதவியாளர் பதவியிலிருந்த புகழேந்தி மணியமாகவும், தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) பதவியிலிருந்த சிலம்பரசன் இளநிலைப் பொறியாளராகவும்.மின் பணியாளர் பதவியிலிருந்த ரஞ்சித்குமார் தொழில்நுட்ப உதவியாளராகவும், பாரா பதவியிலிருந்த முத்துலட்சுமி,யோகேஸ்வரி, இலக்கியா ஆகியோர் அலுவலக உதவியாளராகவும் பதவி உயர்வு பெற்றனர். அவர்களுக்கு துணை கமிஷனர் ராமசாமி வாழ்த்து தெரிவித்தார்.