UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:37 AM
சென்னை:
தொடக்க கல்வி துறையில், ஆசிரியர் பதவி உயர்வில், மாநில அளவிலான பணி மூப்பு கடைப்பிடிக்க, அரசாணை வெளியிடப்பட்டதை, ஆசிரியர் அமைப்புகள் வரவேற்றுள்ளன.தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பதவி உயர்வுக்கான பணி மூப்பு, ஒன்றிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், ஒன்றிய அளவில் மட்டுமே, பதவி உயர்வு வழங்கும் நிலை இருந்தது. பலரின் பதவி உயர்வும் பாதிக்கப்பட்டது.இந்நிலை மாற மாநில அளவில் பணி மூப்பு கடைப்பிடித்து, பதவி உயர்வு வழங்கவேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்தச் சூழ்நிலையில், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், தமிழக அரசு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வில், மாநில அளவிலான பணி மூப்பு கடைப்பிடிக்க, விதிகளில் திருத்தம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை நன்றி தெரிவித்துள்ளன.