UPDATED : டிச 30, 2023 12:00 AM
ADDED : டிச 30, 2023 10:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
வரும் 2024 - 2025ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த விபரங்களை மாவட்ட கல்வித்துறை தயாரித்துள்ளது.அதன்படி, குன்னத்துார், நா.கருப்பண்ண நாடார் கல்வி நிலையம், குப்பம்பாளையம், முதலிபாளையம், காரணம்பேட்டை உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய கோட்டைப்புதுார், ஊத்துக்குளி ஆர் எஸ்., நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாகவும், பல்லடம் இச்சிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.