UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 11:03 AM
திருத்தணி:
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கம் சார்பில் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.மாநில தலைவர் ராஜராஜன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் சரஸ்வதி வரவேற்றார். மாநில பொது செயலர் பாலசுப்ரமணியம், துணை பொது செயலர் ஜீவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர்களின் சங்க தேர்தல் சுமுகமாக ஜனநாயக முறைப்படி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகளிடம் தேர்தல் குறித்து கருத்து கேட்க பட்டது.முடிவில் வரும் ஜனவரி கடைசி வாரத்தில் தேர்தல் நடத்துவது, ஜன.,20ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு, சென்னை மாநில தலைமை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாநில பொருளாளர் துரைப்பாண்டி நன்றி கூறினார்.