UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 11:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்திற்கு ஆந்திர, கர்நாடக மாநில மாணவ - மாணவியரின் வருகை அதிகரித்துள்ளது.இங்குள்ள சிற்பங்கள், ஆங்கிலேயர் கால கலங்கரை விளக்கம், கடற்கரை கண்டு குதுாகலிக்கின்றனர். குன்றுகளில் ஏறி மகிழ்கின்றனர். சிற்பங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிகின்றனர். பள்ளி மாணவ குழுவினர், இலவசமாக சிற்பங்கள் காண, தொல்லியல் மற்றும் சுற்றுலா துறையினர் ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.