தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலைப்புலமை படைத்த கலைஞர்கள் விருதுக்கு தேர்வு

கலைப்புலமை படைத்த கலைஞர்கள் விருதுக்கு தேர்வு

கலைப்புலமை படைத்த கலைஞர்கள் விருதுக்கு தேர்வு


UPDATED : டிச 31, 2023 12:00 AM

ADDED : டிச 31, 2023 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2023 12:00 AM ADDED : டிச 31, 2023 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில், மாவட்ட அளவில் கலைப்புலமை படைத்த 30 சிறந்த கலைஞர்கள் விருது பெற தேர்வு செய்யப்பட்டனர்.கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலை மன்றம் மூலம் மாவட்ட அளவிலான சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் தேர்வு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.கடந்த 2022-23ம் மற்றும் 2023-24ம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப் புலமை அடிப்படையில் 15 கலைஞர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு 30 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்டனர்.இதில் 18 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது கலைச் சுடர்மணி விருது, 51 முதல் 65 வயது கலை நன்மணி விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதுகள் வழங்கப்படுகிறது.தேர்வுக்குழு கூட்டத்தில் கலெக்டருடன் பதவி வழி மற்றும் பதவி சாரா உறுப்பினர்கள் பங்கேற்று விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மாவட்ட அளவிலான சிறந்த கலைஞர்களை வயது மற்றும் கலைப் புலமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கலைஞர்களின் பெயரில் காசோலை வழங்கப்பட உள்ளது.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாரயணன், உதவி இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் துரைராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் தேர்வு குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us