தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தாண்டின் நியூஸ்மேக்கராக பிரதமர் மோடி தேர்வு

இந்தாண்டின் நியூஸ்மேக்கராக பிரதமர் மோடி தேர்வு

இந்தாண்டின் நியூஸ்மேக்கராக பிரதமர் மோடி தேர்வு


UPDATED : டிச 31, 2023 12:00 AM

ADDED : டிச 31, 2023 08:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2023 12:00 AM ADDED : டிச 31, 2023 08:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தாண்டின் நியூஸ்மேக்கர் 2023 என பிரதமர் மோடியை இந்தியா டுடே குழுமம் தேர்வு செய்து கவுரவித்துள்ளது.பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பரபரப்பான தலைப்பு செய்திகளில் வெளியாகுவோர்களுக்கு இந்தியா டுடே குழுமம் நியூஸ்மேக்கர் என அறிவித்து கவுரப்படுத்தி வருகிறது. இதன்படி இந்தாண்டில் இந்தியாவில் ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது,தனது வெளிநாட்டு பயணங்களின் போது அந்நாட்டு தலைவர்களுடனான நட்புறவு, போன்றவற்றால் தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் 2023ம் ஆண்டு தலைப்பு செய்தியாக பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார்.இதையடுத்து பிரதமர் மோடியை இந்தியா டுடே நியூஸ்மேக்கர் 2023 என தேர்வு செய்து அறிவித்தது. இது தொடர்பாக இந்தியா டுடே குழும தலைவர் ஆரூண் பூரி, துணை தலைவர் கலில் பூரி ஆகியோர் பிரதமர் மோடியிடம் விருது வழங்கினர். தவிர 2024 ஜன.08-ம் தேதி வெளியாக உள்ள இந்தியா டுடே இதழில் பிரதமர் மோடியின் படம் கவர்ஸ்டோரியாக வெளியாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us