தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய வம்சாவளி டாக்டருக்கு பிரிட்டனின் உயரிய பட்டம்

இந்திய வம்சாவளி டாக்டருக்கு பிரிட்டனின் உயரிய பட்டம்

இந்திய வம்சாவளி டாக்டருக்கு பிரிட்டனின் உயரிய பட்டம்


UPDATED : டிச 31, 2023 12:00 AM

ADDED : டிச 31, 2023 08:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2023 12:00 AM ADDED : டிச 31, 2023 08:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லண்டன்:
பிரிட்டனில் சாதனையாளர்கள் மற்றும் நாட்டுக்கு சேவை செய்தவர்களை சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியில், நைட் பட்டம் வழங்கப்படும்.இந்தப் பட்டத்தை பிரிட்டன் மன்னர் சார்லஸ் வழங்குவார். புத்தாண்டான நாளை நைட் பட்டம் பெறுவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பொது மருத்துவர் அம்ரித்பால் சிங்கின் பெயர் இடம் பெற்றுள்ளது.நியூகேஸ்டில் பல்கலையில் கவுரவ பேராசிரியராக உள்ள இவர், 30 ஆண்டுகளாக பிரிட்டன் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். பிரிட்டன் மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.இதற்கிடையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நைட் பட்டம் பெறுபவர்களுக்கு தன் வாழ்த்து செய்தியில், நாட்டிற்காக சிறப்பான சாதனை புரிந்தவர்கள், தன்னலமற்ற சேவை செய்தவர்கள், அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்களை அங்கீகரிக்கும் வகையில் நைட் பட்டம் வழங்கப்படுகிறது. பட்டம் பெறுவோர் அனைவரும், இந்த நாட்டின் பெருமைக்குரியவர்கள். எங்களுக்கு உத்வேகம் அளிப்பவர்கள் என்று கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us