திருச்சி வருகிறார் பிரதமர் மோடி: பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி: பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு
UPDATED : ஜன 02, 2024 12:00 AM
ADDED : ஜன 02, 2024 09:39 AM
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலை மாணவர்கள் பட்டமளிப்பு விழாவிலும் திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவிலும் இன்று (ஜன.,2) பிரதமர் மோடி பங்கேற்கிறார்.திருச்சி பாரதிதாசன் பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழாவும், திருச்சி விமான நிலையத்தில், 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் திறப்பு விழாவும், இன்று நடக்கிறது.இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது, தமிழகத்தில் 19,850 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.இதற்காக, இன்று காலை 10:௦௦ மணிக்கு, விமானம் மூலம் திருச்சி வரும் பிரதமர் மோடி, காலை 10:30 மணிக்கு, பாரதிதாசன் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, அங்கு 1528 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். பின், மதியம் 12:01 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.பின் 12:30 மணிக்கு விமான நிலைய வளாகத்தில் பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். பின் 1:10 மணிக்கு திருச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு விமானம் மூலம் செல்கிறார்.பிரதமரின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையம் பகுதி, பாரதிதாசன் பல்கலை வளாகம் ஆகியவை, மத்திய, மாநில போலீசாரின் முழு கட்டுப்பாட்டில், நான்கு அடுக்கு பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.