UPDATED : ஜன 02, 2024 12:00 AM
ADDED : ஜன 02, 2024 11:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் படிக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, பல்கலை அரங்கில் நடந்தது.இதில், 2023-24ம் கல்வியாண்டில் சேர்ந்து படிக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் தகுதி மதிப்பெண் அடிப்படையில், 15 பேர் உதவித்தொகைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இம்மாணவர்களுக்கு, நான்கு ஆண்டு கல்விக்கட்டணம், விடுதி கட்டணத்திற்கான காசோலையை, சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் துரைசாமி வழங்கினார்.நிகழ்வில், துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், சக்திதேவி அறக்கட்டளை இயக்குனர் சாந்தி துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.