UPDATED : ஜன 02, 2024 12:00 AM
ADDED : ஜன 02, 2024 11:41 AM
திருப்பூர்:
பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விரும்பி, விண்ணப்பித்துள்ளவர்கள், அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய ஜன., 5 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து இரண்டு நகல்கள் எடுத்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ஜன., 5 க்குள், 125 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி, பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளவர்கள் (முதல் முறையாக தேர்வு எழுத உள்ளவர்கள், ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அறிவியல் பாடத்தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராதவர்கள்) ஜன., 10 வரை சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் பொதுத்தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.