sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு 37.13 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு 37.13 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு 37.13 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்


UPDATED : ஜன 03, 2024 12:00 AM

ADDED : ஜன 03, 2024 09:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2024 12:00 AM ADDED : ஜன 03, 2024 09:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அறநிலையத்துறை சென்னை, புறநகர் கோவில்கள் பள்ளியில் நடத்தப்பட்ட போட்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னை கீழ்ப்பாக்கம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது.இதில், அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.பின், அமைச்சர் கூறியதாவது:
இந்த ஆட்சியில் கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு 37.13 கோடி ரூபாயில் 92 பணிகளும், கல்லுாரிகளுக்கு 41.53 கோடி ரூபாயில் 34 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 28 பணிகள் முடிவுற்றுள்ளன.கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முதல் நாள் 10,000த்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி உள்ளனர். அங்கு, 360 அரசு விரைவுப் பேருந்துகள், 1,110 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், 840 ஆம்னி பேருந்துகள் என, 2,310 பேருந்துகள் தினசரி வந்து செல்லுகின்ற அளவிற்கு முழுமையாக இயக்கப்படும்.பெங்களூர் போன்ற வெளிமாநிலங்களுக்கு செல்லும் 30 சதவீத பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்கு கோயம்பேடில் இருந்து இயக்கப்படும். பின், கோயம்பேடு பேருந்து நிலையம், அதனையொட்டி சி.எம்.டி.ஏ., விற்கு உள்ள, 16 ஏக்கர் இடத்தையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், கூடுதல் கமிஷனர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us