sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோயில்களை தரிசிக்க புறப்பட்ட கல்லுாரி மாணவர்

கோயில்களை தரிசிக்க புறப்பட்ட கல்லுாரி மாணவர்

கோயில்களை தரிசிக்க புறப்பட்ட கல்லுாரி மாணவர்


UPDATED : ஜன 06, 2024 12:00 AM

ADDED : ஜன 06, 2024 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2024 12:00 AM ADDED : ஜன 06, 2024 10:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்:
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ஒருவர் தன்னந்தனியே நடந்தே இந்தியாவில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்ய தேசியக்கொடி மற்றும் சிவன் கொடியுடன் பயணத்தை தொடர்கிறார்.உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ரன்வீர்சிங், கல்லுாரியில் பி.ஏ., படித்து வரும் இவர் சிறுவயது முதலே கோயில்களுக்கு செல்வது வழக்கம், இந்தியாவில் உள்ள கோயில்களின் பிரமாண்டம், வழிபாடு, கலாசாரம் ஆகியவற்றை அறிய நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது இளவயது கனவாக இருந்துள்ளது.பெற்றோரிடம் தனது ஆசையை தெரிவித்த போது படிப்பை முடித்து விட்டு செல்லலாம் என தெரிவித்ததால் கல்லுாரி படிப்பை முடித்த உடன் கிளம்பியுள்ளார். கடந்தாண்டு மார்ச்சில் கிளம்பிய இவர் ஏழு மாதங்களில் பல்வேறு கோயில்களில் நடந்தே தரிசனம் செய்து விட்டு ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கிருந்து நான்கு வழிச்சாலை வழியாக மதுரை மீனாட்சியம்மனை தரிசிக்க சென்றார்.ரன்வீர்சிங் கூறுகையில்:
40 ஆயிரம் கி.மீ., நடக்க வேண்டும் என திட்டமிட்டு பத்து மாதங்களில் ஏழாயிரம் கி.மீ., கடந்துள்ளேன், ராமேஸ்வரம் சென்று விட்டு மதுரை மீனாட்சியம்மன், சிதம்பரம், திருப்பதி, பீகார், ஒடிசா வழியாக அமர்நாத்தில் இறுதியாக நிறைவு செய்ய உள்ளேன்.சிறுவயதில் இருந்தே கோயில்களுக்கு செல்வதற்காக பணம் சேமித்து வந்தேன், வழியில் பார்க்கும் மக்கள் பலரும் உணவு, உடை உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர். ஆங்காங்கே உள்ள கோயில்களில் இரவில் தங்கும் இவர் காலையில் நீர் நிலைகளில் நீராடிய பின் பயணத்தை தொடர்கிறார். இன்னும் இரண்டு வருடங்களில் பயணம் நிறைவடையும், என்றார்.தினசரி நடக்கும் போது ஏற்படும் நிகழ்வு, சம்பவங்கள், போன்றவற்றை தனது யூ டியூப் பக்கத்திலும் பதிவேற்றி வருகிறார். இன்றைய கால இளைஞர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கிரிக்கெட், சினிமா உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டி நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் கல்லூரி மாணவர் கோயில்களை பார்க்க செல்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us