UPDATED : ஜன 06, 2024 12:00 AM
ADDED : ஜன 06, 2024 10:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சுய தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு, கடன் வழங்கும் முதல்வர் திட்ட முகாம், 15 மண்டலங்களில் துவங்கி உள்ளது.சென்னை மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தில், சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் உட்பட, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வகையில், 15 மண்டலங்களிலும், முதல்வர் திட்ட முகாம் துவங்கி உள்ளது. முகாம், நேற்று துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்று பயனடையுமாறு, சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.