UPDATED : ஜன 07, 2024 12:00 AM
ADDED : ஜன 07, 2024 10:36 AM
ராமாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை இணைந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கான ஆரோக்கியமான வாழ்வியல் குறித்து பயிற்சிப்பட்டறை நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தலைமை வகித்தார். பசுமைப்படை மாவட்ட ஒங்கிணைப்பாளர்கள் பெர்னாடிட், தீனதயாளன், கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.நீர் தரம் பகுப்பாய்வு, பயிர் வளர்ப்புத் துறை, காகித பை தயாரித்தல், வீணாகும் கழிவுப்பொருட்களில் பொருட்கள் தயாரிப்பு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு செயல் முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. சரோஜனி, ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 25 பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.