UPDATED : ஜன 07, 2024 12:00 AM
ADDED : ஜன 07, 2024 05:01 PM
சென்னை:
2021-22 முதல் 2025-26 வரை ஐந்தாண்டு காலத்திற்கு, திருத்தப்பட்ட சமக்ரசிக்ஷா திட்டத்தைத் தொடர அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் சமக்ரசிக்ஷா திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2.94 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2023 ஜனவரி 1, முதல் 2023 டிசம்பர் 31, வரை, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வித்யாபிரவேஷ் - எனும் 3 மாத விளையாட்டு அடிப்படையிலான பள்ளி சூழலுக்கு தயார்படுத்துதல் முறை செயல்படுத்தப்பட்டது. சமக்ரசிக்ஷாவின் கீழ் வழங்கப்பட்ட வித்யா ஆய்வு மையத்தை ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், டெல்லி, கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து 613 மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9,195 கோடியில், சமக்ர ஷிக்ஷா மூலம் படிப்படியாக மேம்படுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.