அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 லட்சத்தில் குறிப்பேடுகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 லட்சத்தில் குறிப்பேடுகள்
UPDATED : ஜன 09, 2024 12:00 AM
ADDED : ஜன 09, 2024 10:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்பாக்கம்:
கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. நிலைய நிர்வாகம், சமூக பொறுப்பு திட்டத்தில், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச குறிப்பேடுகள் வழங்கி வருகிறது.தற்போது, 80 பள்ளிகளில் பயிலும், 85,200 மாணவ - மாணவியருக்கு, 29.30 லட்சம் ரூபாய் மதிப்பில், தரமான தாளில் தயாரிக்கப்பட்ட குறிப்பேடுகள், தலா ஐந்து வழங்குவதாக, அணு மின் நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.