UPDATED : ஜன 09, 2024 12:00 AM
ADDED : ஜன 10, 2024 10:38 AM
இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட தேசிய தேர்வு முகமை - என்.டி.ஏ., நடத்தும் இத்தேர்வின் அடிப்படையில் நூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுமுறை:
கணினி அடிப்படையிலான் இத்தேர்வில் மொத்தம் 100 மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் இடம்பெறும். வினாத்தாள் ஆங்கிலத்தில் இருக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.தேர்வு மையங்கள்:
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறும். தேர்வு கட்டணம்:
பொதுப் பிரிவினர்: ரூ.1,200 பிற்படுத்தப்பட்ட பிரிவினர்: ரூ.1,000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர்: ரூ.900 மாற்றுத்திறனாளிகள்: ரூ.800விண்ணப்பிக்கும் முறை:
pgcuet.samarth.ac.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆதார், கல்விச்சான்றிதழ்கள், புகைப்படம், முகவரிச்சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 24தேர்வு நடைபெறும் நாள்:
மார்ச் 11 முதல் மார்ச் 28 வரைவிபரங்களுக்கு:
pgcuet.samarth.ac.in