UPDATED : ஜன 10, 2024 12:00 AM
ADDED : ஜன 10, 2024 10:01 AM
திருப்பூர்:
ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான வினாடி - வினா போட்டி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கலெக்டர் கிறிஸ்துராஜ், சப்கலெக்டர் சவுமியா ஆனந்த் ஆகியோர் துவக்கிவைத்தனர். இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு, தனியார் 30 பள்ளிகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் 60 பேர் பங்கேற்றனர். மாணவர் இரண்டுபேர் வீதம் குழுவாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுக்களாக போட்டி நடத்தப்பட்டது. பொது அறிவு, மொழித்திறன், தேர்தல் சார்ந்த கேள்விகளுக்கு, மாணவர்கள் பதிலளித்தனர்.அம்மாபாளையம் ராமகிருஷ்ண வித்யாலயா மாணவர்கள் சூரியபகவதி, விநாயக் ஸ்ரீராம் குழு, காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிரணேஷ், விகாஸ் குழுவினர் மாவட்ட அளவிலான வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றனர். இம்மாணவர் நான்குபேரும், வரும் 11ம் தேதி சென்னையில் நடைபெறும் மண்டல அளவிலான வினாடி - வினா போட்டியில் பங்கேற்கின்றனர்.