sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்


UPDATED : ஜன 11, 2024 12:00 AM

ADDED : ஜன 11, 2024 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2024 12:00 AM ADDED : ஜன 11, 2024 09:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
திருக்கனுார் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் முட்டையுடன் மதிய உணவு சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதி, மணலிப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, மணலிப்பட்டு மற்றும் அதனை சுற்றிலுள்ள தமிழக பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.பள்ளியில் நேற்று முட்டையுடன் கூடிய மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிட்ட மாணவர்களில் 15 பேருக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். மாணவர்களுக்கு பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. சிகிச்சை பின் ஆசிரியர்கள், மாணவர்களை அழைத்து வந்து, பள்ளிக்கு பெற்றோரை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பினர்.இதேபோல், திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட மாணவர்கள் சிலரும், வாந்தி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பினர்.இதுகுறித்து தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us