தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.இ.டி., நுழைவு தேர்வு தேதி திடீர் மாற்றம்

சி.இ.டி., நுழைவு தேர்வு தேதி திடீர் மாற்றம்

சி.இ.டி., நுழைவு தேர்வு தேதி திடீர் மாற்றம்


UPDATED : ஜன 12, 2024 12:00 AM

ADDED : ஜன 12, 2024 12:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2024 12:00 AM ADDED : ஜன 12, 2024 12:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
தொழில்நுட்ப உயர்படிப்புகளுக்கான சி.இ.டி., நுழைவு தேர்வு தேதி, ஏப்ரல் 18, 19ம் தேதிக்கு திடீரென மாற்றப்பட்டு உள்ளது.கர்நாடகாவில், பொறியியல், ஆர்கிடெக்சர், பி.எஸ்சி., விவசாயம், பி.எஸ்சி., தோட்டக்கலை, ஹோமியோபதி, விவசாய பயோ தொழில்நுட்பம், பி.டெக், பி.பார்ம், டி.பார்ம் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கு, 1999 முதல் சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படிப்பவர்கள், இந்த தேர்வு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில், ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் நடப்பதாக கர்நாடகா தேர்வு ஆணையம் கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி அறிவித்தது.ஆனால், ஏப்., 21ம் தேதி தேசிய அளவில் மத்திய அரசு, வேறு தேர்வு நடத்துவதால், சி.இ.டி., தேர்வு தேதி முன்கூட்டியே நடத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏப்ரல் 18ம் தேதி காலை 10:30 மணிக்கு உயிரியியல்; மதியம் 2:30 மணிக்கு கணிதம்; 19ம் தேதி காலை 10:30 மணிக்கு இயற்பியல்; மதியம் 2:30 மணிக்கு வேதியியல் தேர்வு நடத்தப்பட உள்ளது.ஒவ்வொரு பாடத்துக்கு தலா 60 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடக்கும். மேலும், வெளி மாநிலம், வெளிநாடு மாணவர்களுக்கு, ஏப்ரல் 20ம் தேதி, கன்னட மொழி தேர்வு நடத்தப்பட உள்ளது. சி.இ.டி., தேர்வுக்கு, 10ம் தேதி முதலே ஆன்லைனில் விண்ணப்பம் துவங்கிவிட்டது. விண்ணப்பிக்க, பிப்., 10ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us