UPDATED : ஜன 12, 2024 12:00 AM
ADDED : ஜன 12, 2024 12:59 PM
தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில், 6,151 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 2 மற்றும் 2ஏ முதல் நிலைத்தகுதி தேர்வு, 2022ம் ஆண்டு மே 21ல் நடந்தது; அதன் முடிவுகள், நவம்பரில் வெளியாகின.அதில், 51,987 பேர் பிரதான தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்., 25ல் பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள், நேற்று www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.முதல் கட்டமாக, 161 நேர்முக தேர்வு பதவிகளை பெற, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ள, 483 தேர்வர்களின் பதிவெண் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு, ஆன்லைனில்&' ஏற்கனவே பதிவேற்றப்பட்ட சான்றிதழ்கள் அடிப்படையில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.அதன்பின், நேர்முக தேர்வு அல்லாத, 5,990 பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.