sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/156 போலி டாக்டர்கள் கர்நாடகாவில் கண்டுபிடிப்பு

156 போலி டாக்டர்கள் கர்நாடகாவில் கண்டுபிடிப்பு

156 போலி டாக்டர்கள் கர்நாடகாவில் கண்டுபிடிப்பு


UPDATED : ஜன 12, 2024 12:00 AM

ADDED : ஜன 12, 2024 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2024 12:00 AM ADDED : ஜன 12, 2024 12:46 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகா முழுதும், ஸ்கேன் சென்டர்களை சோதனையிட்ட, சுகாதாரம், குடும்ப நலத்துறை அதிகாரிகள், 156 போலி டாக்டர்களை கண்டுபிடித்தனர். இது குறித்து, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தில் சில ஸ்கேன் சென்டர்கள், சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிகின்றன. பெண் குழந்தைகள் என்றால், கருவிலேயே கலைக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனை, கிளினிக்குகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, மாவட்ட சுகாதார அதிகாரிகள், மாநிலம் முழுதும் 5,083 ஸ்கேன் சென்டர்கள், நர்சிங் ஹோம்களில் சோதனை நடத்தினர்; 34 ஸ்கேன் சென்டர்கள் விதிமீறலாக செயல்பட்டன. இவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. விதிமீறலாக செயல்பட்ட 429 ஸ்கேன் சென்டர்களுக்கு &'நோட்டீஸ்&' அளிக்கப்பட்டது.சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், இதுவரை 156 போலி டாக்டர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, போலீசில் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us