தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களுக்கு பிரதமர் எப்போதும் ஆதரவு: சோம்நாத்

இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களுக்கு பிரதமர் எப்போதும் ஆதரவு: சோம்நாத்

இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களுக்கு பிரதமர் எப்போதும் ஆதரவு: சோம்நாத்


UPDATED : ஜன 12, 2024 12:00 AM

ADDED : ஜன 12, 2024 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2024 12:00 AM ADDED : ஜன 12, 2024 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திநகர்:
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தது முதல் இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.காந்திநகரில் நடக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு தொடர்பான மாநாட்டில் சோம்நாத் பேசியதாவது: 
கடந்த 6 மாதங்களின் இஸ்ரோவின் வெற்றிக்குப் பிறகு பிரதமர் எந்த மாதிரியான தொலைநோக்குப் பார்வையை அளித்தார் என்பதைப் பார்க்கிறேன். அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தது முதல் விண்வெளித் திட்டங்களுக்கு தீவிர ஆதரவாளராகவும் இருந்தார்.பிரதமர், எங்களிடம் விண்வெளியில் மனிதர்கள் இருப்பதற்கான தொடர்ச்சியான செயல்பாட்டை நாம் உருவாக்க வேண்டும். ககன்யான் திட்டம் நம்மிடம் இருந்தாலும் அது நீண்ட காலத்திற்கு தொடர வேண்டும். 2040க்குள் நிலவில் மனிதன் தரையிறங்க வேண்டும்.ஆனால் அது வெகு தொலைவில் இல்லை; மிகவும் நெருக்கமாக உள்ளது. மேலும் 2035 க்குள் ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும். இந்தியர்கள் அங்கு சென்று ஆராய்ச்சி செய்ய அணுகக்கூடிய ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு சோம்நாத் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us