UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 11:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ரவி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சிதம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆசிரியர்களை பழிவாங்கும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.