sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்

புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்

புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்


UPDATED : ஜன 15, 2024 12:00 AM

ADDED : ஜன 15, 2024 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 15, 2024 12:00 AM ADDED : ஜன 15, 2024 10:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேனி:
மாவட்டத்தில் நடக்க உள்ள புத்தகத் திருவிழா தொடர்பான அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பொங்கல் விடுமுறை முடிந்ததும் கலெக்டர் தலைமையில் நடக்க உள்ளது.மாவட்ட நிர்வாகம் சார்பில் பிப்., முதல் வாரத்தில் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கலெக்டர் ஷஜீவனா தலைமையில் பொங்கல் விடுமுறை முடிந்ததும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது.கடந்தாண்டு பழனிச்செட்டிப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடந்தது. இந்தாண்டு மேலும் சில இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.புத்தக திருவிழாவில் மாவட்டத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரை அழைக்கவும், விழாவிற்கு வரும் சிறுவர்களை கவரும் வண்ணம் பொழுது போக்கு அம்சங்கள், உணவு ஸ்டால்கள் உள்ளிட்டவைக்கு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.மேலும் தினமும் காலை, மாலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சலுகை கூப்பன்கள் உள்ளிட்டவை வழங்குவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us