UPDATED : ஜன 15, 2024 12:00 AM
ADDED : ஜன 15, 2024 11:22 AM
சென்னை:
தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்பை நிறைவு செய்யும், அரசு சேவை சாரா டாக்டர்கள், மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான ஒப்பந்த காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ள அரசாணை:
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப, 2022ல் இருந்து முதுநிலை மருத்துவ படிப்பை நிறைவு செய்த, அரசு சேவை சாரா மருத்துவ மாணவர்களின் ஒப்பந்த காலம், இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்படுகிறது.ஒப்பந்தத்தை நிறைவு செய்யாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை, முதுநிலைபட்ட படிப்புகளுக்கு 40 லட்சம் ரூபாயில்இருந்து, 20 லட்சம் ரூபாயாகவும்; முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு, 20 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.