விமான நிலைய காலி பணியிடங்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்க அறிவுரை
விமான நிலைய காலி பணியிடங்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்க அறிவுரை
UPDATED : ஜன 16, 2024 12:00 AM
ADDED : ஜன 16, 2024 10:59 AM
ஊட்டி:
தெற்கு மண்டல விமான நிலைய காலி பணி இடங்களை நிரப்புவதற்காக, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்திய விமான நிலைய ஆணையத்தால் நடத்தப்படும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க, 26ம் தேதி கடைசி நாள். இணைய வழியாக விண்ணப்பிக்க, www.aai.aero என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம், 1,000 ரூபாய் (பொது பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், இதர பிரிவினர்) செலுத்த வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு (ஏ,பி.சி., பி.சி., எம்.பி.சி.,) - 33 ஆண்டுகள்; எஸ்சி/எஸ்டி -35 ஆண்டுகள். கல்வி தகுதி, ஜூனியர் அசிஸ்டன்ட் (பயன் சர்வீஸ்) பணிக்கு 12ம் வகுப்பு அல்லது டிப்ளமோ (மெக்கானிக்கல் ஆட்டோமொபைல்) முடித்திருக்க வேண்டும்.ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டன்ட் (அலுவலகம்) பணிக்கு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சீனியர் அசிஸ்டன்ட் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு டிப்ளமோ (எலக்ட்ரானிக்ஸ்/ டெலி கம்யூனிகேஷன்/ரேடியோ இன்ஜினியரிங்) முடித்திருக்க வேண்டும்.அசிஸ்டன்ட் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு பி.காம்., முடித்திருக்க வேண்டும். கூடுதல் விபரம் தேவைப்படுவோர் மேற்கண்ட இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.