மஞ்சப்பை விருது அறிவிப்பு: காத்திருக்கிறது ரூ.18 லட்சம் பரிசு
மஞ்சப்பை விருது அறிவிப்பு: காத்திருக்கிறது ரூ.18 லட்சம் பரிசு
UPDATED : ஜன 16, 2024 12:00 AM
ADDED : ஜன 16, 2024 11:13 AM
ஊட்டி:
பிளாஸ்டிக் இல்லாத பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு, மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, மீண்டும் மஞ்சப்பை நடைமுறையில் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும், தலா, மூன்று சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.முதல் பரிசாக, 10 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக, ஐந்து லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசாக, மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில், முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு &'மஞ்சப்பை விருதுகள்&' வழங்கப்படும்.விண்ணப்ப படிவங்கள், கலெக்டர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் தனிநபர், நிறுவன தலைவரால் முறையாக கையொப்பம் இட்டிருக்க வேண்டும். கையொப்பம் இட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (சிடி பிரதிநிதிகள்) கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.