sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் ராமர் கோவிலில் பிரதிஷ்டை

மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் ராமர் கோவிலில் பிரதிஷ்டை

மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் ராமர் கோவிலில் பிரதிஷ்டை


UPDATED : ஜன 16, 2024 12:00 AM

ADDED : ஜன 16, 2024 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2024 12:00 AM ADDED : ஜன 16, 2024 11:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அயோத்தி:
கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் விக்ரகம், அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுசெயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் இன்று முதல் துவங்கி ஜன.21 வரை நடக்கின்றன. கோயில் கருவறையில் பிரதிஷ்ட்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம் ஜன. 18ல் கருவறையில் வைக்கப்பட உள்ளது.கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இந்த சிலை 150 - 200 கிலோ எடை உடையது. கருவறைக்குள் வைக்கப்படும் விக்ரகத்திற்கான சடங்குகள் முடிந்து ஜன. 22 மதியம் 12:20 மணிக்கு ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் சடங்கு துவங்கி 1:00 மணிக்கு நிறைவடையும்.தற்போது வழிபாட்டுக்காக கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள ராமர் விக்ரகமும்,கருவறைக்குள் இடம் பெறும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us