sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தியத்திற்கான மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு

பேராசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தியத்திற்கான மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு

பேராசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தியத்திற்கான மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு


UPDATED : ஜன 16, 2024 12:00 AM

ADDED : ஜன 16, 2024 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2024 12:00 AM ADDED : ஜன 16, 2024 12:00 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் கல்லுாரிகளின் பருவத்தேர்வு விடைத்தாள் திருத்தியதற்காக பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்பூதியத்தை வழங்காமல் பல்கலை இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.இப்பல்கலைக்கு உட்பட்டு 90க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளுக்காக 2023 ஏப்ரலில் நடந்த பருவத் தேர்வுகளின் விடைத்தாள்கள் பல்கலையில் மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்காக கல்லுாரிகளில் சீனியாரிட்டி அடிப்படையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட உதவி, இணை பேராசிரியர்கள் மதிப்பீடு பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பல்கலை சார்பில் ஒரு இளங்கலை விடைத்தாளுக்கு ரூ. 12, முதுகலை விடைத்தாளுக்கு ரூ. 15 வீதம் மதிப்பீடு செய்தவர்களுக்கு பல்கலை சார்பில் மதிப்பூதியம் வழங்கப்படும். ஆனால் இதுவரை மதிப்பூதியம் வழங்காமல் பல்கலை இழுத்தடித்து வருகிறது.பேராசிரியர்கள் கூறியதாவது: 
மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தேர்வு கட்டணத்தில் இருந்து தான் பல்கலை இந்த மதிப்பூதியத்தை வழங்குகிறது. தேர்வு கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய நிலையிலும் மதிப்பூதியம் மட்டும் பல ஆண்டுகளாக அதே நிலையில் தான் உள்ளது. 9 மாதங்களுக்கு மேலாகியும் வழங்கப்படவில்லை. இதுதவிர பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளின் விடைத்தாள்கள் ஆன்லைனில் பேராசிரியர்கள் திருத்தினர். அதற்கும் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2023, நவ., விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்கிவிட்டது. பல்கலை நிதிச்சூழலை காரணம் காட்டி மதிப்பூதியத்தை நிறுத்தி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us