தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, கட்டுரை போட்டி
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, கட்டுரை போட்டி
UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 09:25 AM
கோவை:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள், அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில் நடத்தப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி துவக்கி வைத்தார்.பள்ளி அளவிலான கவிதை போட்டியில், அன்னுார் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி கமிதா, கட்டுரை போட்டியில் அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி யுவஸ்ரீ, பேச்சுப் போட்டியில் ஒண்டிபுதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி கனிகாஸ்ரீ ஆகியார் முதல் பரிசு பெற்றனர்.கல்லுாரி அளவிலான கவிதை போட்டியில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி மாணவன் பழனிசாமி, கட்டுரை போட்டியில் நிர்மலா கல்லுாரி மாணவி ஜோஅன், பேச்சுப்போட்டியில் வேளாண் பல்கலை மாணவி மித்ரா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். இவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது.