திருப்புதல் தேர்வு ரிசல்ட் பகுப்பாய்வு எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவு
திருப்புதல் தேர்வு ரிசல்ட் பகுப்பாய்வு எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவு
UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 09:57 AM
கோவை:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சமீபத்தில் நடந்த திருப்புதல் தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், கடந்தாண்டு பிளஸ் 2 ரிசல்ட்டில், மாநில அளவில் நான்காமிடம் பிடித்தது. பத்தாம் வகுப்பு பொறுத்தவரை, ஒன்பதாம் இடம் பிடித்தது. மாநில தரவரிசைப்பட்டியலில், முன்னிலை வகிக்கும் வகையில், பள்ளிகளில் பயிற்சி வகுப்புகளை தீவிரப்படுத்த முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.சமீபத்தில் நடந்த அரையாண்டு தேர்வு ரிசல்ட் பகுப்பாய்வு கூட்டத்தில், பள்ளி வாரியாக மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள், தோல்வியை தழுவியோர், எந்த பாடத்தில் சராசரி மதிப்பெண்கள் குறைந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள், தலைமையாசிரியர்களிடம் கேட்கப்பட்டன.முந்தைய ஆண்டு தேர்ச்சி விகிதமும் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து, திருப்புதல் தேர்வு ரிசல்ட்டை பகுப்பாய்வு செய்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், முதல் திருப்புதல் தேர்வில், பாடவாரியாக அதிக மதிப்பெண்கள், சராசரி மதிப்பெண்கள், தோல்வியை தழுவியோர் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பதால், தேர்வு முடிவுகள், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றனர்.