UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 08:59 AM
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக டான்செட் எனும் தமிழ்நாடு காமன் என்ட்ரென்ஸ் டெஸ்ட் நடத்தப்படுகிறது. முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு சி.இ.இ.டி.ஏ., எனும் காமன் இன்ஜினியரிங் என்ட்ரென்ஸ் டெஸ்ட் நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இத்தகைய தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒதுக்கீட்டு இடங்கள்:
டான்செட்:
அண்ணா பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல், கலை, அறிவியல் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள்.சி.இ.இ.டி.ஏ.,:
அண்ணா பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம். அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த மதிபெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கலாம்.தேர்வு:
டான்செட்படிப்புகள்:
* மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மிஷின்ஸ்ட்ரேஷன் - எம்.பி.ஏ., * மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - எம்.சி.ஏ., தேர்வு:
சி.இ.இ.டி.ஏ., - பி.ஜி.,படிப்புகள்:
* மாஸ்டர் ஆப் இன்ஜினியரிங் - எம்.இ.,* மாஸ்டர் ஆப் டெக்னாலஜி - எம்.டெக்., * மாஸ்டர் ஆப் ஆர்க்கிடெக்சர் - எம்.ஆர்க்., * மாஸ்டர் ஆப் பிளானிங் - எம்.பிளான்.,கல்வித்தகுதிகள்:
எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., ஆகிய பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. அதேபோல், இதர படிப்புகளுக்கும் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில், இதே மதிப்பெண் சதவீதத்தை பெற்றிருக்க வேண்டும்.தேர்வு நாள்:
எம்.சி.ஏ., - மார்ச் 9, 10:00 - 12:00 மணிவரைஎம்.பி.ஏ., - மார்ச் 9, 02:30 - 04:30 மணிவரைஎம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் - மார்ச் 10, 10:00 - 12:00 மணிவரைவிண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 7விபரங்களுக்கு:
https://tancet.annauniv.edu/tancet/