UPDATED : ஜன 19, 2024 12:00 AM
ADDED : ஜன 19, 2024 09:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக அரசு துறைகளில், குரூப் 2 நிலை பதவிகளில், முதற்கட்டமாக, 161 காலியிடங்களுக்கு நேர்முக தேர்வு வழியாகவும், பின், 5,900 இடங்களுக்கு நேர்முக தேர்வு இன்றியும் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.இந்நிலையில், சான்றிதழ்களை ஏற்கனவே ஆன்லைனில் பதிவேற்றியவர்கள், சில ஆவணங்களை பதிவேற்றாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, விடுபட்ட ஆவணங்களை, வரும், 27க்குள் டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் தேர்வர்களுக்கான பக்கத்தில் பதிவேற்றலாம் என, டி.என்.பி.எஸ்.சி., என அறிவித்துள்ளது.