sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய சங்கத்திற்கு எதிராக முன்னாள் கல்லுாரி மாணவர்கள் உண்ணாவிரதம்

புதிய சங்கத்திற்கு எதிராக முன்னாள் கல்லுாரி மாணவர்கள் உண்ணாவிரதம்

புதிய சங்கத்திற்கு எதிராக முன்னாள் கல்லுாரி மாணவர்கள் உண்ணாவிரதம்


UPDATED : ஜன 19, 2024 12:00 AM

ADDED : ஜன 19, 2024 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2024 12:00 AM ADDED : ஜன 19, 2024 09:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்:
மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் மாணவர் சங்கத்தினர் தலைவர் கோவர்த்தனன் தலைமையில் நேற்று கல்லுாரி வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.கோவர்த்தனன் கூறியதாவது:
1994 முதல் செயல்படும் சங்கத்தின் பதிவை 30 ஆண்டுகளாக புதுப்பிக்கவில்லை. 2023ல் புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். அதற்கு நாளை மறுநாள் (ஜன.,21) தேர்தல் நடக்க உள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.அதில் எங்கள் சங்கத்தின் 400 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறோம் என்றார். அவர்களை திருப்பரங்குன்றம் போலீசார் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.கல்லுாரி தரப்பில் கூறியதாவது:
1994 முதல் முன்னாள் மாணவர்கள் சங்கம் செயல்பட்டது. அதற்கு பதிவு இல்லை. கடந்த முறை நாக் கமிட்டியினர் ஆய்வுக்கு வந்த போது முன்னாள் மாணவர் சங்கம் பதிவு இல்லை என்றால் மதிப்பெண் குறையும் என்றனர். இம்மாணவர் சங்கம் 5 ஆண்டுகளாக கணக்கு சமர்ப்பிக்கவில்லை.நாக் கமிட்டி அறிவுறுத்தல்படி 7 பேர் அடங்கிய புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டது. அதில் பதிவு செய்யப்படாத சங்கத்தினர் 13 பேர் இடம் பெற்றுள்ளனர். இத்தேர்தல் நடத்த புதிய உறுப்பினர்கள் சேர்ந்து கொள்ளுமாறு அறிவித்து 45 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.அப்போது விட்டுவிட்டு, இப்போது கல்லுாரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த செயல்படுகின்றனர் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us