sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் வழியில் படித்தவர்களை அவமதிக்கும் தேர்வு வாரியம்

தமிழ் வழியில் படித்தவர்களை அவமதிக்கும் தேர்வு வாரியம்

தமிழ் வழியில் படித்தவர்களை அவமதிக்கும் தேர்வு வாரியம்


UPDATED : ஜன 19, 2024 12:00 AM

ADDED : ஜன 20, 2024 08:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2024 12:00 AM ADDED : ஜன 20, 2024 08:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ் வழியில் படித்தவர்களின் உணர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அவமதித்துள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர் பணிக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட, 229 பேருக்கு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணியாணை வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களின் உணர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அவமதித்திருக்கிறது; இது கண்டனத்திற்குரியது.நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் இன்று வெளியாகும் நாளை வெளியாகும் என்று ஒவ்வொரு நாளையும் கடுமையான மன உளைச்சலுடன் தேர்வு எழுதியவர்கள் கடக்கின்றனர்.அவர்களில் பலருக்கு நாற்பது வயதுக்கும் மேலாகி விட்டதால் வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே தமிழ் வழியில் படித்து சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு உடனடியாக பணியாணை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us