sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புருனே உதவித்தொகை - 2024

புருனே உதவித்தொகை - 2024

புருனே உதவித்தொகை - 2024


UPDATED : ஜன 20, 2024 12:00 AM

ADDED : ஜன 20, 2024 08:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2024 12:00 AM ADDED : ஜன 20, 2024 08:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

படிப்பு நிலைகள்:
டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு.கல்வி நிறுவனங்கள்: 
* புருனே தாருஸ்ஸலாம் பல்கலைக்கழகம் * சுல்தான் ஷெரீப் அலி இஸ்லாமிய பல்கலைக்கழகம் * புருனே தொழில்நுட்ப பல்கலைக்கழகம் * செரி பெகவான் பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி * புருனே பாலிடெக்னிக்தகுதிகள்:
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்புகளில் சேர்க்கை பெற 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஆங்கில புலமைக்கான ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் 6.0 மதிப்பெண் அல்லது டோபல் தேர்வில் குறைந்தது 550 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். படிப்புகள், கல்வித்தகுதிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்களின் இணையதளத்தை பார்க்கலாம்.உதவித்தொகை விபரம்:
கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம், புருனே சென்றுவர விமான போக்குவரத்து கட்டணத்தை அந்நாட்டு அரசே ஏற்கிறது. மேலும், தனிப்பட்ட செலவினங்களுக்கு மாதம் சுமார் ரூ. 31 ஆயிரம், உணவு செலவினங்களுக்கு மாதம் சுமார் ரூ.9 ஆயிரம், புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 37 ஆயிரம் உட்பட பல்வேறு சலுகைகள் இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை:
பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், கல்லூரி / பல்கலைக்கழக சான்றிதழ் உட்பட தேவையான ஆவணங்களுடன் அந்தந்த கல்வி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 15விபரங்களுக்கு:
www.mfa.gov.bn/pages/online-bdgs.aspx

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us