படிப்பிற்கு கிடைத்த பட்டம்: பட்டமளிப்பு விழாவில் பெருமிதம்
படிப்பிற்கு கிடைத்த பட்டம்: பட்டமளிப்பு விழாவில் பெருமிதம்
UPDATED : ஜன 20, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 10:17 AM
திண்டுக்கல்:
ஆசிரியர் பணி அறப்பணிஅதற்கே உன்னை அர்ப்பணி என்று ஆர்,வி.எஸ்., குழும இயக்குநர், கிருஷ்ணகுமார் பட்டமளிப்பு விழாவில் பேசினார்.பொதுவாக நம் வாழ்வில் பட்டம் என்பது வானில் பறப்பதற்காக மட்டுமில்லை. வாழ்வின் உயரத்திற்கு செல்வதற்காகவும் பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது. கல்லுாரிகளில் சேர்ந்து கஷ்டப்பட்டு படித்து கல்லுாரி காலம் முடிந்து வெளியே செல்லும் போது நாம் படித்து முடித்ததற்கான சான்றுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் வழங்குகின்றனர். இதை வழங்குவதற்காக விழாவையும் நடத்துகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போரிடம் கண்ணீர்,வேதனை,கனவுகள் எல்லாம் இலை மறைக்காய்களாக மறைந்திருக்கும். வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல என்ன செய்யலாம் என சிந்திக்க துாண்டுகிறது. இப்படிப்பட்ட ஒரு அருமையான நிகழ்வு தான் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,கல்வியியல் கல்லுாரியில் நடந்துள்ளது. இதில் பங்கேற்று மனம் திறந்தவர்களின் கருத்து உங்கள் பார்வைக்காக...ஆசிரியர் பணியே அறப்பணி
இயக்குநர், கிருஷ்ணகுமார், ஆர்,வி.எஸ்., குழுமம்:
ஆசிரிய மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கல்லுாரியில் பயின்ற சில காலங்கள் பயிற்சிக்குரிய காலமாக இருந்தாலும் பணியில் அமரும்போது, ஆசிரியர் பணியை அர்பணிப்புடன் செய்ய வேண்டும். ஆசிரியர் பணி அறப்பணிஅதற்கே உன்னை அர்ப்பணி என்று கூறுவது போல் பணியாற்ற வேண்டும். எவ்வாறு மாணவர்களுக்கு கல்வியை மகிழ்ச்சியை போதிக்க வேண்டுமென்பதை பயிற்சி அளித்துள்ளோம்.தினமும் கற்கும் ஆசிரியர்கள்
பாரி, முதன்மை நிர்வாக அலுவலர், ஆர்.வி.எஸ்., குழுமம்:
ஆசிரியர்கள் தினம் தினம் கற்றுக் கொண்டே இருக்கின்றனர். புதிய விஷயங்களை கற்றுகொண்டிருக்கிறனர். இவர்கள் ஒரு நுாலகம் போன்றவர்கள். தகவல் சுரங்கம் தான் ஆசிரியர்கள். மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் உள்ள இறைநிலையை கண்டுபிடிப்பதுதான் ஒரு ஆசிரியரின் தலையாய கடமை.பெற்றோரும் பெருமை
செல்வின், கல்லுாரி முதல்வர்:
பல மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இதன் மூலமாக மாணவர்களுக்கு உத்வேகமான கற்றல் பயிற்சியினை கொடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பெற்றோரும் அவர்களின் பிள்ளைகளை நினைத்து பெருமை கூறினர். பட்டத்தினை பெற்ற மாணவர்கள் எங்களின் எதிர்காலம் ஊர்ஜிதப்பட்டதாக தெரிவித்தனர்.கருத்துக்கள் கற்றுக் கொடுத்தன
காயத்ரி, கணிதத்துறை மாணவி:
ஆசிரியர் பணியின் முக்கியத்துவம், சமூகத்திற்கு ஆசிரியர் பங்கு என்ன, எப்படி நடந்து கொள்ள வேண்டும், மாணர்களுக்கு எவ்வாறு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும், கற்றல் தன்மை போன்ற பல்வேறு விஷயங்களை கல்லுாரியில தெளிவான விளக்கங்களை கொடுத்தனர். எதிர்காலத்தில் மாணவர்களை உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களான எங்களிடம் உள்ளது என்பதனை புரிய வைத்தனர். ஒவ்வொருவரின் கருத்தும் பலவற்றை கற்றுக் கொடுத்துள்ளது.இங்கு படித்தது தான் காரணம்
சித்ரா தேவி, கணினி அறிவியல் மாணவி:
முற்றிலுமாக இயற்கை சூழலோடு அமைந்துள்ள இந்த கல்லுாரியில் படித்ததில் மகிழ்ச்சி. இங்கு ஆசிரியர் தகுதித் தேர்வு,டி.ஆர்.பி., போன்றவற்றிற்கு சிறப்பு பயிற்சியளித்தனர். இங்கு படித்த அனுபவம் சிறப்பு வாய்ந்த ஒன்று. குறிப்பிட்ட சிறப்புவகுப்புகள் எங்களுக்கு ஆசிரியர் பணிக்கு செல்லும் போது உதவியது. நான் உட்பட உடன் படித்த அனைவருமே நல்ல இடத்தில் பணியாற்றுவதற்கு காரணம் இந்த கல்லுாரியில் பயின்றது தான்.நுாலகங்களால் மேம்படும் அறிவு
வாசுகி, பட்டம் பெற்ற தமிழ்துறை மாணவி:
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதற்கேற்ப ஒரு குருவாக, ஆசிரியராக எனது பணியை மேற்கொள்ள இன்று வாங்கிய பி.எட்.பட்டம் மேலும் உயர்வு செய்ய உயர்வு செய்யும். மாணவர்களின் இறைநிலை அறிந்து வெளிப்படுத்தும் வகையில் இப்பட்டம் என வழிகாட்டும் என நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் அலைபேசி பயன்பாட்டை தவிர்த்து நுாலகங்களை பயன்படுத்துவதால் மாணவர்களின் அறிவு மேம்படும் என்பதை இந்த பட்டமளிப்பு விழா மூலம் அறிந்து கொண்டேன். மாணவர்களுக்கு எடுத்துச் செல்வேன்.