பி.ஆர்க்., எம்.ஆர்க்., படிப்பு அங்கீகாரம் புதுப்பிப்பு
பி.ஆர்க்., எம்.ஆர்க்., படிப்பு அங்கீகாரம் புதுப்பிப்பு
UPDATED : ஜன 20, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 10:27 AM
கோவை:
கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் அமைப்பின் கீழ், கட்டடவியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., எம்.ஆர்க்., படிப்புகளுக்கு, 2024-25ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.கட்டடவியல் கல்லுாரிகளை மத்திய அரசின் கீழ் செயல்படும் கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் அமைப்பு கட்டுப்படுத்துகிறது. கல்லுாரிகள் ஆண்டுதோறும் அங்கீகாரம் புதுப்பிப்பது மட்டுமின்றி, பாடப்பிரிவுகளுக்கும் அங்கீகாரம் பெறவேண்டியது அவசியம்.எதிர்வரும் கல்வியாண்டுக்கான புதுப்பிப்பு பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. இப்படிப்புகளுக்கு அங்கீகாரம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, ஜன., 24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்., 5ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளன; அபராதத்துடன், பிப்., 19ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.பி.ஆர்க்., எம்.ஆர்க்., மட்டுமின்றி டிப்ளமோ படிப்புகளுக்கும் அங்கீகாரம் புதுப்பிக்க குறிப்பிட்ட தேதிக்கு முன் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்ப கட்டண விபரம், ஆய்வுகள் உள்ளிட்ட பிற, விபரங்களுக்கு https://coa.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.