கவர்னர் விருதிற்கு ஐந்து கல்லுாரிகள் தேர்வாக வாய்ப்பு
கவர்னர் விருதிற்கு ஐந்து கல்லுாரிகள் தேர்வாக வாய்ப்பு
UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 09:48 AM
தேனி:
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லுாரிகளுக்கு கவர்னர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த 5 கல்லுாரிகள் தேர்வாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் ஏப்., மே., வில் லோக்சபா தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தலில் ஓட்டளிப்பது பற்றி பொது மக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் தலைமுறை வாக்காளர்களாக அதிகளவில் கல்லுாரி மாணவர்களாக உள்ளனர். அவர்களுக்கு கல்லுாரி நிர்வாகங்கள் மூலம் விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பாக போட்டிகளை நடத்திய கல்லுாரிகளுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ல் சென்னையில் நடைபெறும் விழாவில் கவர்னர் விருதுகள் வழங்க உள்ளார். இதற்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் கல்லுாரிகளை தேர்வு செய்து அனுப்பி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து கவர்னர் விருது பெற 5 கல்லுாரிகள் வரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.