எஸ்.ஐ. மறுதேர்வு வினாத்தாள் லீக்? உளவுத்துறை அதிகாரியிடம் விசாரணை
எஸ்.ஐ. மறுதேர்வு வினாத்தாள் லீக்? உளவுத்துறை அதிகாரியிடம் விசாரணை
UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 09:59 AM
பெங்களூரு:
எஸ்.ஐ., மறுதேர்வு வினாத்தாள் வெளியானதாக, தேர்வர்கள் அளித்த புகாரில், உளவுத்துறை எஸ்.ஐ.,யிடம், சி.சி.பி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கர்நாடகாவில் 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, 2021ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்தது, தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தெரியவந்தது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, முறைகேடாக தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற்று இருந்தனர்.கர்நாடக உயர் நீதிமன்றம் தலையிட்டதை அடுத்து, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தேர்வு நடைபெற உள்ளது. கர்நாடகா தேர்வுகள் ஆணையம் நடத்தும் இந்த தேர்வை நடத்துகிறது.இந்நிலையில், எஸ்.ஐ., மறுதேர்வு வினாத்தாள் வெளியானதாகக் கூறி, பெங்களூரு சந்திரா லே - அவுட் போலீஸ் நிலையம் முன், தேர்வர்கள், திடீரென போராட்டம் நடத்தினர்.கண்டிப்பாக நடக்கும்
உளவுத்துறையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றும் லிங்கய்யா என்பவர், வினாத்தாளை கசிய விட்டதாகவும், தேர்வர்கள் சிலரிடம் பேரம் பேசியதாகவும் கூறினர். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், எஸ்.ஐ., லிங்கய்யாவை பிடித்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.தேர்வில் முறைகேடு
அவரது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டது. வாட்ஸாப் மூலம் லிங்கய்யா சிலரிடம் பேசியது தெரியவந்து உள்ளது. ஆனால் தேர்வில் முறைகேடு செய்வது குறித்து பேசினாரா என்பது உறுதியாகவில்லை.வினாத்தாள் வெளியானதாக கூறிய தேர்வர்கள், தேர்வை ஒத்திவைக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், அறிவித்த நேரத்தில் தேர்வு கண்டிப்பாக நடக்கும் என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.