UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 10:01 AM
தேனி:
இன்று அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேனி வேதபுரீ தட்ஷிணாமூர்த்தி கோயில் வளாகத்தில் ஐஸ் கட்டிகளில் ஜெய் ஸ்ரீராம் என்ற திருநாமம் ஆங்கில எழுத்துக்களால் சிற்பமாக வடித்து காட்சிப்படுத்தப்பட்டது.அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டி பா.ஜ., நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் சார்பில் தேனி வேதபுரீ தட்ஷிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.தொடர்ந்து கோயில் வளாகத்தில் 2024ம் ஆண்டை குறிக்கும் வகையில் 2024 கிலோ எடையுள்ள ஐஸ்கட்டியால் ஜெய் ஸ்ரீராம் திருநாமம் ஆங்கில எழுத்துக்களால் சிற்பமாக செதுக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.இந்த ஐஸ் சிற்பத்தை தேனி கூடலுாரைச் சேர்ந்த ஐஸ் சிற்ப கலைஞர் இளஞ்செழியன் 2 மணி நேரத்தில் செதுக்கினார். விழாவில் டாக்டர் அனந்தகிருஷ்ணன், தனியார் மில் நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் நாராயணபிரபு, விவசாய அணி மாவட்டச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகிள் பங்கேற்றனர். இன்று மாவட்டத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.