பள்ளி விடுதியில் தீ விபத்து சீனாவில் 21 மாணவர்கள் பலி
பள்ளி விடுதியில் தீ விபத்து சீனாவில் 21 மாணவர்கள் பலி
UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 10:02 AM
பீஜிங்:
சீனாவில் உறைவிடப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், விடுதியில் தங்கியிருந்த, 21 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பாங்க்செங் மாவட்டத்தின் டுஷு நகரில், தனியார் உறைவிடப்பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.இதில் அங்கு தங்கி படித்து வந்த துவக்கப்பள்ளி மாணவர்கள், 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பலியான மாணவர்கள் அனைவரும் மூன்றாம் வகுப்பில் படித்தவர்கள் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற பகுதிகளில் இருந்து வந்து தங்கி படித்து வந்ததும் தெரியவந்தது.தீ விபத்து தொடர்பாக பள்ளி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.