sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாநில கணக்காயருக்கு ரூ.11.74 கோடியை எப்பங்க கொடுப்பீங்க?

/

மாநில கணக்காயருக்கு ரூ.11.74 கோடியை எப்பங்க கொடுப்பீங்க?

மாநில கணக்காயருக்கு ரூ.11.74 கோடியை எப்பங்க கொடுப்பீங்க?

மாநில கணக்காயருக்கு ரூ.11.74 கோடியை எப்பங்க கொடுப்பீங்க?


UPDATED : ஜன 22, 2024 12:00 AM

ADDED : ஜன 22, 2024 05:00 PM

Google News

UPDATED : ஜன 22, 2024 12:00 AM ADDED : ஜன 22, 2024 05:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை வருங்கால வைப்பு நிதி வட்டியுடன் சேர்ந்து ரூ.11.74 கோடியை மாநகராட்சி எப்போது வழங்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 438 ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, அதற்கான வட்டி 1.4.1990 முதல் 31.3.2019 வரை மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாநகராட்சி முறையாக வழங்கவில்லை. அவை முழுவதும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான பணம்.இத்தொகை கடந்த 29 ஆண்டுகளாக ரூ.20.05 கோடி வழங்க வேண்டியிருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நடத்திய போராட்டம் காரணமாக 29 ஆண்டுகளுக்கு பின் 15.69 கோடியை மட்டுமே மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாநகராட்சி செலுத்தியது.நிலுவை பி.எப்., ரூ. 4.35 கோடி, அதற்கான வட்டி ரூ. 6.39 கோடி என மொத்தம் ரூ.11.74 கோடியை இன்னும் வழங்காமல் மாநகராட்சி இழுத்தடித்து வருகிறது. இதை விரைந்து வழங்க ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டாலும் நடவடிக்கை இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ஆசிரியர்கள், அலுவலர்கள் நலன் கருதி நிலுவை பி.எப்., வட்டித் தொகையை விரைவில் வழங்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் நடவடிக்கை இல்லை. ஏற்கனவே போராட்டங்கள் நடத்தித்தான் தொகையை வழங்கச் செய்தோம். அதுபோல் நிலுவை தொகையையும் விரைவில் வழங்க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us