பயன்பாடற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
பயன்பாடற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 04:59 PM
விருதுநகர்:
விண்வெளியில் உள்ள பயன்பாடற்ற செயற்கைக் கோள்களை மீண்டும் பூமியின் சுற்றுவட்டபாதைக்கு கொண்டு வந்து அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் கலந்துரையாடலின் 60 வது அமர்வு விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற வீரமுத்துவேல் பேசியதாவது:
சந்திரயான் -3 திட்டத்தின் மூலம் அறிவியல் சவால்களை எப்படி எதிர்கொள்வது என தெரிந்துள்ளது. விண்வெளித்துறையில் கணிதம், இயற்பியல் மிகவும் முக்கியமானது. நிலவில் இருக்கும் ஆற்றலை பயன்படுத்தி செவ்வாய் கோளுக்கு எளிதாக செல்ல முடியும்.விண்வெளியில் உள்ள பயன்பாடற்ற செயற்கைக்கோள்களை மீண்டும் பூமியின் சுற்றுவட்டபாதைக்கு கொண்டு வந்து அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஆராய்ச்சியில் உள்ளது.காலநிலை மாற்றங்களை மிக துல்லியமாக அறிய தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் தேவைப்படுகிறது. விண்வெளித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக இருக்கும். நிலவில் உள்ள ஆற்றலை பயன்படுத்தி செவ்வாய் கோளுக்கு எளிதாக செல்ல முடியும்.அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் இஸ்ரோவின் தொடர் பயணம் அமைந்து வருகிறது என்றார்.