UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 04:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை காந்தி மியூசியத்தில் சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்ட மதுரை மாவட்ட தியாகிகள் என்ற நுால் வெளியீட்டு விழா தொகுப்பாசிரியர் முத்துப்பாண்டி தலைமையில் நடந்தது.ஜேசுதாஸ் காந்தி வரவேற்றார். முதல் பிரதியை லோக் அதாலத் மாவட்ட நீதிபதி ரஜினி வெளியிட, ஓய்வு கலெக்டர் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பெற்றார். தியாகிகள் முத்துமணி, பரமசிவம், அழகம்பெருமாள், சுந்தரமகாலிங்கம், திருநாவுக்கரசர், நாகப்பன், கட்டச்சாமி, சூலுார் செட்டியார் கவுரவிக்கப்பட்டனர்.காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், மாநகராட்சி காங்., கவுன்சிலர்கள் கார்த்திகேயன், முருகன், போஸ், ராஜ்பிரதாபன், டாக்டர் நோவா பேசினர். நேதாஜி சாமிநாதன் நன்றி கூறினார்.