ஆக்ஸ்போர்டு பல்கலையில் நிறுவ தயாராகும் திருவள்ளுவர் சிலை
ஆக்ஸ்போர்டு பல்கலையில் நிறுவ தயாராகும் திருவள்ளுவர் சிலை
UPDATED : ஜன 23, 2024 12:00 AM
ADDED : ஜன 23, 2024 09:42 AM
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இயங்கும் தனியார் சிற்பக்கூடங்களில், இந்தியா மட்டுமின்றி, சர்வதேச நாட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யும் சுவாமியர் கற்சிலைகளும் வடிக்கப்படுகின்றன.மேலும், புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், பண்ணை வீட்டு அலங்கார கற்சிலைகளும் வடிக்கப்படுகின்றன. உலக நாடுகளின் தமிழ்ச் சங்கங்கள், தமிழ் கல்வி அமைப்புகள் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் திருவள்ளுவர் சிலைகள், இங்குள்ள கூடங்களில் வடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.சென்னையில், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் இயங்கும் வி.ஜி.பி., உலக தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் சிலைகளை சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தமிழ் துறைக்கு, தற்போது திருவள்ளுவர் கற்சிலை வழங்குகிறது.அதற்காக, மாமல்லபுரம், க்ரியேட்டிவ் ஸ்கல்ப்ச்சர்ஸ் என்ற சிற்பக்கலைக் கூடத்தில், ஐந்து அடி உயரம், மூன்றரை அடி அகலம், ஒரு டன் எடை எடையில், திருவள்ளுவரின் கற்சிலை தயாராகி வருகிறது.