உலக பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடத்திற்கு ஏற்றம் கண்ட இந்தியா
உலக பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடத்திற்கு ஏற்றம் கண்ட இந்தியா
UPDATED : ஜன 24, 2024 12:00 AM
ADDED : ஜன 24, 2024 10:07 AM
புதுடில்லி:
இந்திய பங்குச்சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் டாலராக அதிகரித்ததன் மூலம் உலக பங்குச்சந்தை தரவரிசையில் ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியது.இந்திய பங்கு சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வர்த்தகமாகின. வர்த்தகம் துவக்கத்தில் சென்செக்ஸ் 551.09 புள்ளிகள் உயர்ந்து 71,974.74 ஆக வர்த்தகமானது. நிப்டி 158 புள்ளிகள் உயர்ந்து 21,729.80 புள்ளிகளுடன் வர்த்தகமாகின.இதன்மூலம் இந்திய பங்குச்சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் டாலராக அதிகரித்து சாதனை படைத்துள்ளது. மேலும், உலக பங்குச்சந்தை தரவரிசையில் இந்திய பங்குச்சந்தை ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியது. ஹாங்காங் பங்குச்சந்தை மதிப்பு 4.28 டிரில்லியன் டாலராக உள்ளது.