முன்வைப்புத்தொகை நிலுவை மருத்துவ கல்வித்துறை விளக்கம்
முன்வைப்புத்தொகை நிலுவை மருத்துவ கல்வித்துறை விளக்கம்
UPDATED : ஜன 24, 2024 12:00 AM
ADDED : ஜன 24, 2024 10:17 AM
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை, மருத்துவக் கல்வி இயக்ககம் நிரப்புகிறது.இதில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இடங்கள் பெறுவோர், பாதியில் போவதை தடுக்க, அவர்களிடம் முன்வைப்பு தொகையாக, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.ஒருவேளை கவுன்சிலிங்கில் இடங்கள் கிடைக்காவிட்டால், அவர்களுக்கு மூன்று மாதத்திற்குள், செலுத்திய பணம் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.கடந்த 2023 - 24ல் அப்படி பணம் செலுத்தியவர்களில், 979 மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்கள் தவறாக உள்ளதாகவும், அவர்களது பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.அவர்கள் மீண்டும், ddugselcom@gmail.com என்ற மின்னஞ்சலில், பிப்., 5ம் தேதிக்குள் சரியான கணக்கு விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டால், மருத்துவக் கல்வி இயக்கம் பொறுப்பேற்காது என கூறப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு, tnmedicalselection.net/news/23012024024329.pdf என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.